என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நோய் கொடுமை"
புதுச்சேரி:
புதுவை அய்யங்குட்டி பாளையம் அமைதி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 71). இவரது மனைவி அகிலாம்பாள். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
ராமலிங்கத்துக்கு நோய் அதிகமானதால் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் நோய் கொடுமை அதிகமானதால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கயிற்றால் ஊஞ்சலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது வீட்டுக்கு வந்த அவரது மகன் ரமேஷ் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள காட்டுபட்டியைச் சேர்ந்த கண்ணையா மனைவி காவேரியம்மாள் (வயது 65). இவருக்கு கேன்சர் நோய் இருந்து வந்தது. கழுத்தில் கட்டியுடன் அவதிப்பட்டு வந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
நேற்று கருவேலங்குளம் பகுதியில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார்.
இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
திருபுவனை:
திருபுவனை அருகே குச்சிபாளையம்- திருக்கனூர் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவகி வயது (60). இவர்களுக்கு ஆனந்தன் என்ற மகன் உள்ளார். கால் ஊனமுற்ற தேவகி கடந்த சில மாதங்களாக கால் வலியினால் அவதி அடைந்து வந்தார். இதற்காக மருந்து- மாத்திரையும் சாப்பிட்டு வந்தார். ஆனால் வலி குறையவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் ஆனந்தன் ஆகியோர் கூலிவேலைக்கு சென்று விட்ட நிலையில் தேவகிக்கு நோய் கொடுமை அதிகமானதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த தேவகி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அவர் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார்.
மாலையில் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி அங்கு மனைவி தேவகி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் வில்லியனூர் மெயின்ரோடு கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது59. இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணவேணியின் மூத்த மகனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். மூத்த மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கிருஷ்ணவேணி மனவருத்தத்துடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருஷ்ணவேணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை புதுசாரம் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் நாராயணன் (வயது 56). டெம்போ டிரைவரான இவர், கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் டெம்போ ஓட்ட செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார்.
இந்த நிலையில் நாராயணனுக்கு நேற்று நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாராயணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின் விசிறியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் ஏட்டு வெங்கடேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை கருவடிக்குப்பம் மேயர் நாராயணசாமி நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது73). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு இருதய நோய் இருந்து வந்தது. இதற்காக அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். ஆனாலும் அவ்வப்போது நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் சுந்தரமூர்த்தியின் மனைவி விஜயா நேற்று அருகில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது சுந்தரமூர்த்திக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அங்குள்ள மதுகடைக்கு சென்று மதுகுடித்த அவர் பின்னர் வீட்டின் குளியலறையில் இரும்பு கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குணாளன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் அரசன்குளம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது53). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்து வந்தும் நோய் கொடுமை தீரவில்லை.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லட்சுமி நேற்று வீட்டின் அருகில் உள்ள கொய்யாமரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பெரியசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியாங்குப்பம்:
புதுவை பூரணாங்குப்பம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் முகமதுஇலியாஸ். எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெபின்தாஜ் (வயது40). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. 16 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஜெபின்தாஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை முகமது இலியாஸ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மகனும் பள்ளிக்கு சென்று விட்டார்.
அப்போது ஜெபின்தாஜிக்கு நோய் கொடுமை அதிகமாகவே மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் முன்பக்க கதவை உள்புறமாக தாழிட்டு கொண்டு அவர் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவரது மகன் வீட்டின் கதவு தாழிட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது தாய் ஜெபின்ராஜ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கோர்க்காடு கிராமம் அம்மன் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மனைவி லட்சுமி. இருவரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இதற்கிடையே செல்வத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று செல்வம் உடல்நலக்குறை வால் கட்டிட வேலைக்கு செல்லவில்லை. லட்சுமி மட்டும் கட்டிட வேலைக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று மதியம் செல்வத்துக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையம் அருகே தர்மாபுரி வழுதாவூர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது68). இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சுப்பிரமணியன் கடந்த சில ஆண்டுகளாக நோய் கொடுமையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் பெற்று வந்தார். நோய் கொடுமை காரணமாக அவ்வப்போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போதெல்லாம் அவரது குடும்பத்தினர் தற்கொலை முயற்சியை தடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் வீட்டின் முன்பக்க வாயில்கேட்டில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராவ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியை சேர்ந்தவர் ராஜாராமன். இவரது மகள் ஜெகதீஸ்வரி (வயது 27). பி.டெக். படித்து முடித்து இருந்த இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களாக ஜெகதீஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்தும் நோய் குணமாக வில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ஜெகதீஸ்வரிக்கு நோய் கொடுமை அதிகமானதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜெகதீஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி அவர் துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெகதீஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்